Type Here to Get Search Results !

பாலக்கோட்டில் வணிகர் சங்க மாநில தலைவர் விக்ரம்ராஜா பேட்டி.


தமிழகத்தில் சுங்க கட்டணம் குறைக்கா விட்டால் மாபெரும் போராட்டத்தை வணிகர் சங்கம் முன்னெடுக்கும் என கூறினார், தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வணிகர் சங்க நிர்வாகி திருமண விழாவில் கலந்து கொண்ட வணிகர் சங்க பேரமைப்பு மாநில தலைவர் விக்ரம ராஜா மணமக்களை வாழ்த்தினார்.


இதை அடுத்து செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, தமிழக முழுவதும் வணிகர்கள் ஜிஎஸ்டி வரியால் எவ்வளவு பாதிப்பு அடைகிறார்கள் என்பது குறித்து அமைச்சர் தலைமையில் நாளை சென்னையில் மாபெரும் குறை கேட்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது என்றும், பாலக்கோடு தற்காலிக  பேருந்து நிலையம் நகர பைபாஸ் அருகாமையிலே மாற்ற வேண்டும் என்றும், கிருஷ்ணகிரியில் வெடி விபத்து காரணமாக  பெரும்பாலான பட்டாசு வியாபாரிகளின் லைசென்சுகள்  ரத்து செய்யப்பட்டதால் அவர்கள் பெரும் சிரமத்திற்க்கு ஆளாகி உள்ளதாகவும், விலைவாசியை கட்டுப்படுத்த வணிகர் சங்க பிரதிநிதிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், துறை சார்ந்த அதிகாரிகள் உள்ளிட்டவர்களின்  குழு அமைத்து நெறிமுறைப்படுத்தினால் ஓரளவுக்கு விலைவாசியை  கட்டுப்படுத்த முடியும், வரும் நாட்களில் வெங்காயம் விலை பெரும் அளவில்  உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


பருப்பு விலை உயரக்கூடிய சூழல் உள்ளது மத்திய மாநில அரசுகள் விலைவாசியை கட்டுப்படுத்த வேண்டும், விலைவாசி உயர்வு ஏற்பட்டால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் பதுக்கல்  என்பது சாமானிய வியாபாரிகள் செய்வதில்லை, அதானி, அம்பானி, ரிலையன்ஸ் போன்ற பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களே செய்கின்றனர், நெடுஞ்சாலை பகுதியில் சுங்க கட்டணம் பெரிய அளவில் வசூலிக்கப்படுவதாகவும், தமிழகத்தில் சுங்க கட்டணம் குறைக்கா விட்டால் மாபெரும் போராட்டத்தை வணிகர் சங்கம் முன்னெடுக்கும்  என தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies