Type Here to Get Search Results !

62 ஆதரவற்றவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்த மை தருமபுரி அமைப்பினர்.


ஓசூர் அட்கோ காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட மோரனப்பள்ளி கிராமத்தில் நான்கு ஆண்டுகளுக்கு மேலாக ஆதரவற்ற ஆண் ஒருவர் சுற்றிவந்துள்ளார். இவர் அப்பகுதியில் குப்பைகள், பாட்டில்களை எடுத்தே விற்று அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் வாழ்ந்து வந்துள்ளார். 


கடந்த மாதம் சாலை விபத்து ஏற்பட்டு மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காவல் துறையினர் இவரை பற்றி விசாரித்ததில் எந்த ஒரு தகவலும் கிடைக்கப்பெறவில்லை. சில தினங்களுக்கு முன் சிகிச்சை பலனின்றி இறந்த இவரை பிரேத பரிசோதனை செய்து ஓசூர் அட்கோ காவல் நிலைய காவலர் அசோக், மை தருமபுரி அமரர் சேவை ஒருங்கிணைப்பாளர் அருணாசலம், முஹம்மத் ஜாபர், தென்றல் ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்தனர். மை தருமபுரி அமரர் சேவை மூலம் இதுவரை 62 புனித உடல்கள் நல்லடக்கம் செய்துள்ளனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies