தேசிய முற்போக்கு திராவிட கழகம் கிழக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் தருமபுரி பிடமனேரியில் நடைபெற்றது. வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி அன்று நடக்க இருக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு மற்றும் அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கிடவும், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நதி நீரை கர்நாடக அரசு திறக்க கோரியும், விலை நிலங்களை அழித்து வரும் என்எல்சி நிர்வாகத்தை கண்டித்தும், விவசாய நிலங்களை விலை நிலங்களாக மாற்ற அரசு கைவிட கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துவது தொடர்பாக பிடமனேரி கிளையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தேமுதிக மாவட்ட செயலாளர் குமார் தலைமை வகித்தார், மாவட்ட அவைத்தலைவர் (கிழக்கு) தங்கவேலு, மாவட்ட பொருளாளர் (கிழக்கு) சீனிவாசன், பொறியாளர் அணி சார்பாக செயலாளர் (கிழக்கு) பிரகாஷ், தொண்டர் அணி செயலாளர் (கிழக்கு) ராமன், இளையராஜா, திருமூர்த்தி செயலாளர் கிழக்கு, செந்தாமரை கண்ணன் துணை செயலாளர் கிழக்கு ஆகியோர் பங்கேற்றனர் இந்நிகழ்வை விக்னேஷ் குமார் ஒன்றிய செயலாளர் (மேற்கு) ஏற்பாடு செய்தனர்