![]() |
Img credit : google.com. |
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள காவாப்பட்டி பெருமாள் கோவில் நகரில் வசித்து வருபவர் விவசாயி வடிவேல் (வயது.35) இவரது மனைவி பிரியா (வயது. 26) இவர்களுக்கு 9 வயதில் 1மகளும். 7 வயதில் 1மகனும் உள்ளனர்.
பிரியா பாலக்கோட்டில் உள்ள கார்மெண்ட்சில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு பிரியா தான் வேலை செய்யும் கார்மென்ட்ஸ் அருகே நின்று கொண்டிருந்தார். மனைவி வீட்டில் இல்லாததால் வடிவேல் அவரை தேடிவந்தார், அப்போது மனைவி கார்மெண்ட்ஸ் அருகே நின்று கொண்டிருந்ததை பார்த்தவர்.
நடு இரவில் எதற்காக இங்கே வந்தாய் என கையில் இருந்த கட்டையால் சராமாரியாக தாக்கியுள்ளார். பிரியாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பிரியாவை மீட்டு பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இன்று பிரியாவின் தாயார் மாதம்மாள் (43) கொடுத்த புகாரின் பேரில் பாலக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து வடிவேலுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.