தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே மேல் கொள்ளுப்பட்டி. கீழ் கொள்ளுப்பட்டி இரண்டு கிராமங்கள் இணைந்து நடத்தும் மிகப் பழமை வாய்ந்த ஸ்ரீ முனியப்பன் ஆடி மாதம் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மிக விமர்சியாக நடைபெறுகிறது.
பாப்பாரப்பட்டி அருகே மேல் கொள்ளுப்பட்டி. கீழ் கொள்ளுப்பட்டி கிராமத்திற்கு சேர்ந்த பழமை வாய்ந்த ஸ்ரீ முனியப்பன் கோவில் திருவிழா நடைபெற்றது.
இதில் கிராம மக்கள் ஒன்றாக இணைந்து பூ அலங்கார. மாவிளக்கு தட்டு. பூஜை பொருட்கள். மேளதாளம் முழங்க கிராமத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஸ்ரீ முனியப்பன் ஆலயம் வரை நடந்து சென்று கோவில் வளாகத்தில் ஸ்ரீ முனியப்பன் சாமிக்கு பூமாலை போட்டு பூஜை அலங்காரங்கள் செய்து சாமியே வழிபட்டனர்.
பிறகு சாமிக்கு பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் கோழி. ஆடு ஆகியவை பலியிட்டு பொங்கல் வைத்து முடிகாணிக்கை செய்து வேண்டுதலை நிறைவேற்றினர்.
மேலும் கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு கிடா விருந்து வழங்கப்பட்டது. இந்த திருவிழாவை மேல் கொள்ளுப்பட்டி. கீழ் கொள்ளுப்பட்டி கிராம மக்கள் செய்திருந்தனர்.