Type Here to Get Search Results !

பொது கணக்குக் குழுவினர் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள், அடிப்படை வசதிகள் மேம்பாட்டு பணிகள் குறித்து இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.


தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, பொது கணக்குக் குழுத் தலைவர் திரு. கு. செல்வபெருந்தகை அவர்கள் தலைமையில் குழு உறுப்பினர்கள் தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள், அடிப்படை வசதிகள் மேம்பாட்டு பணிகள் குறித்து இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.


தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, பொது கணக்குக் குழுத் தலைவர் / ஸ்ரீ பெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. கு. செல்வபெருந்தகை அவர்கள் தலைமையில், குழு உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி இஆப., அவர்கள் முன்னிலையில் தருமபுரி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள், அடிப்படை வசதிகள் மேம்பாட்டு பணிகள் குறித்து இன்று (23.08.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.


இந்த ஆய்வில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, பொது கணக்குக் குழுத் தலைவர் / ஸ்ரீ பெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. கு. செல்வபெருந்தகை அவர்கள் தலைமையில் குழு உறுப்பினர்களான திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் திரு. ஈ.ஆர். ஈஸ்வரன் அவர்கள், பரமத்திவேலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. S. சேகர் அவர்கள், திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. S. S. பாலாஜி அவர்கள் ஆகியோர் தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள், அடிப்படை வசதிகள் மேம்பாட்டு பணிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.


தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, பொது கணக்குக் குழுவினர் தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், பூமாண்டஅள்ளி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் உள்ள வகுப்பறைகள் மற்றும் ஆய்வகங்களை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள். மேலும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இக்கல்லூரி மாணவர் விடுதியினையும் நேரில் பார்வையிட்டு, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள்.


இதனை தொடர்ந்து, காரிமங்கலம் வட்டம், காரிமங்கலம் பேருந்து நிலையத்தில் இயக்கம் மற்றும் பராமரிப்பு நிதி திட்டத்தின் கீழ் ரூ.96.00 இலட்சம் மதிப்பீட்டில் கடைகள், பொதுக்கழிப்பறை கட்டடம், சைக்கிள் ஸ்டேண்ட் மற்றும் பயணியற் நிழற்கூடம் பராமரிப்பு பணிகள் உள்ளிட்ட கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும், காரிமங்கலம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் மூலதன மான்ய நிதி திட்டத்தின் கீழ் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டு வருவதையும், காரிமங்கலம் பேரூராட்சிக்குட்பட்ட வாரசந்தையில் கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.2.13 கோடி மதிப்பீட்டில் திறந்தவெளி கடைகள், பொதுக்கழிப்பிடம், சுற்றுச்சுவர் கட்டுதல், வேர் பிளாக் சாலை அமைத்தல் உள்ளிட்ட மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதையும், காரிமங்கலம் புதிய உழவர்சந்தையில் ரூ. 75.00 இலட்சம் மதிப்பீட்டில் உட்கட்டமைப்பு வசதி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதையும் பொது கணக்குக் குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.


பின்னர் தருமபுரி நகராட்சி, சந்தை பேட்டையில் கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கட்டுமானப்பணிகளை பொது கணக்குக் குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். மேலும், தருமபுரி நகராட்சி, உழவர் சந்தை அருகில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.3.00 கோடி மதிப்பீட்டில் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய நிர்வாக அலுவலகம் மற்றும் கொள்முதல் உள்ளீட்டு அலுவலக கட்டடம் கட்டப்பட்டு வரும் பணிகளை பொது கணக்குக் குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் தரமானதாக செய்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.


இந்த ஆய்வுகளின் போது, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.பி.வெங்கடேஷ்வரன், தருமபுரி ஆவின் பொது மேலாளர் மரு. மாலதி, தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் திருமதி.டி.கே.கீதாராணி, தருமபுரி மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து துறை தலைமை அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies