Type Here to Get Search Results !

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது கணக்குக் குழு (2023-2024) தணிக்கை பத்திகள் குறித்த மாவட்ட அளவிலான ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது.


தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, பொது கணக்குக் குழுத் தலைவர் திரு. கு. செல்வபெருந்தகை அவர்கள் தலைமையில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது கணக்குக் குழு (2023-2024) தணிக்கை பத்திகள் குறித்த மாவட்ட அளவிலான ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, பொது கணக்குக் குழுத் தலைவர் திரு. கு. செல்வபெருந்தகை அவர்கள் தலைமையில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது கணக்குக் குழு (2023-2024) தணிக்கை பத்திகள் குறித்த மாவட்ட அளவிலான ஆய்வுக்கூட்டம் குழு உறுப்பினர்கள் / சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. அக்ரி எஸ். எஸ். கிருஷ்ண மூர்த்தி, திரு. ஈ.ஆர். ஈஸ்வரன், திரு. தா. உதயசூரியன், திரு. S. சேகர், திரு. S.S. பாலாஜி ஆகியோர், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் முன்னிலையில் இன்று (23.08.2023) நடைபெற்றது. 


இக்கூட்டத்தில் பொது கணக்குக் குழுத் தலைவர் அவர்கள் பேசும்போது தெரிவித்ததாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொது கணக்குக் குழுவின் தலைவராக எனக்கு வாய்ப்பளித்தமைக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.


இக்குழுவானது இன்று தருமபுரி மாவட்டத்தில் கள ஆய்வுகளை மேற்கொண்டு, தணிக்கை பத்திகள் மீதான தரவுகள் மற்றும் கருத்துக்களின் அடிப்படையில் உரிய பதில்கள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. பொதுக்கணக்கு குழு என்பது 1921 ஆண்டு இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அரசின் வரவு, செலவுகளை எதிர்க்கட்சிகளும் கண்காணிக்க வேண்டும் என்பதற்காக பாராளுமன்றம், சட்டமன்றத்தில் இக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் உறுப்பினர்களாக 18 உறுப்பினர்கள் இருக்க வேண்டும் என்றும் வகுத்துள்ளனர். இக்குழுவானது நாட்டின் வளங்களின் இருப்பு, வளங்களை சிறந்த முறையில் பயன்படுத்துவது வளரும் பொருளாதாரத்தை வளர்ந்த நாடுகளில் இருந்து வேறுபடுத்துவது என்று சில விஷயங்களை கவனிக்கும். 


மேலும், இக்குழுவானது அரசு நலத்திட்டங்களை கொடுக்கும் பொழுது, உண்மையான பயனாளிகளுக்கு அது சென்றடைகிறதா? என்பதையும், சட்டமன்றத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதியின் ஒவ்வொரு ரூபாயும் ஆக்கப்பூர்வமாக, நம்பிக்கையாக மற்றும் சிக்கனமாக பயன்படுத்தப்படுகிறதா என்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்ற நோக்கில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.


அரசு நிர்வாகம் என்பது ஒரு வெளிப்படை தன்மை வாய்ந்த நிர்வாகமாக இருத்தல் வேண்டும். இக்குழுவானது கடந்த 2ஆண்டுகளில் 2வது முறையாக தருமபுரி மாவட்டத்திற்கு வருகைதந்து கள ஆய்வுகளை மேற்கொண்டு, இன்றைய தினம் 14 துறைகளின் சார்பில் தணிக்கை பத்திகள் குறித்த மாவட்ட அளவிலான ஆய்வு கூட்டத்தை மேற்கொண்டுள்ளது. இக்கூட்டத்தில் தொடர்புடைய துறை அலுவலர்களின் விவர அறிக்கை பெறப்பட்டு, பேரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது, இவ்வாறு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, பொது கணக்குக் குழுத் தலைவர் திரு. கு. செல்வபெருந்தகை அவர்கள் தெரிவித்தார்கள்.


பின்னர் பொது கணக்குக் குழுத் தலைவர் திரு. கு. செல்வபெருந்தகை அவர்கள் செய்தியாளர் சந்திப்பின்போது, செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தருமபுரி மாவட்டத்தில் பொதுக்கணக்குக் குழுவானது இன்று காலையில் கள ஆய்வையும், மாலையில் ஆய்வுக்கூட்டத்தையும் மேற்கொண்டது. தருமபுரி மாவட்டம் பினதங்கிய மாவட்டம். மாவட்ட ஆட்சித்தலைவர் சிறப்பாக முன்னெடுத்து சென்று கொண்டிருக்கிறார்கள். உயர்கல்வித்துறை, சுகாதாரத்துறை, பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை, பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை உள்ளிட்ட துறைகளில் உள்ள சுட்டிக்காட்டப்பட்டுள்ள விவரங்கள் குறித்து நடவடிக்கை மேற்கொள்ள பரிந்துரை செய்துள்ளோம். பொதுக் கணக்குக் குழுவானது பள்ளிக்கல்வித்துறையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள விடுதிகள் சரியாக பராமரிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளோம். பள்ளிக் கல்வித்துறையின் மூலம் பள்ளிகள் தரம் உயர்த்தும் பொழுது, அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, தரம் உயர்த்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சட்டப்பேரவை கூட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கென துணை திட்டத்துக்கான தனியாக புதிய சட்டம் இயற்றப்படும் என்று அறிவித்துள்ளார்கள். தருமபுரி மாவட்ட வளர்ச்சி தொடர்பாக வரப்பெற்ற மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவருக்கு பரிந்துரைத்துள்ளோம். இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு சட்டப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இவ்வாறு பொது கணக்குக் குழுத் தலைவர் திரு. கு. செல்வபெருந்தகை அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்கள்.


முன்னதாக, வருவாய்த்துறையின் சார்பில் 13 பயனாளிகளுக்கு ரூ.11.02 இலட்சம் மதிப்பீட்டில் வீட்டுமனை பட்டா மற்றும் தொழிற்கல்வி உதவித்தொகையினையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 7 பயனாளிகளுக்கு ரூ.1.55 இலட்சம் மதிப்பீட்டில் ஸ்மார்ட் ரீடர் மற்றும் உதவித்தொகைகள் என மொத்தம் 20 பயனாளிகளுக்கு ரூ.12.57 இலட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, பொது கணக்குக் குழுத் தலைவர் திரு. கு. செல்வபெருந்தகை அவர்கள் வழங்கினார்கள்.


இந்த ஆய்வுக்கூட்டத்தில், தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.பி.வெங்கடேஷ்வரன், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆ.கோவிந்தசாமி, அரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.வே.சம்பத்குமார், சேலம் சரக காவல் துறை துணைத்தலைவர் திருமதி. ராஜேஸ்வரி இகாப., தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஸ்டீபன் ஜேசுபாதம், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை சார்புச் செயலாளர் திரு. ஜெ. பாலசீனிவாசன், மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) திருமதி. ஆர். பிரியா, தருமபுரி மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து துறை தலைமை அலுவலர்கள் கலந்துகொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies