Type Here to Get Search Results !

பத்து ரூபாய் இக்கத்தின் மூலம் பி.செட்டி அள்ளி ஊராட்சி, தீர்த்தார அள்ளி கிராமத்தில் ஊராட்சி வளர்ச்சி பாதை மற்றும் தகவல் அறியும் உரிமை சட்டப் பயிற்சி அளிக்கப்பட்டது.


தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஒன்றியம், பி.செட்டி அள்ளி  ஊராட்சி, தீர்த்தார அள்ளி கிராமத்தில் புதிய ஓவர் டேங்க் கட்டி தருதல், சாக்கடை கால்வாய் தூர்வாரி சரி செய்தல், புதிய மின் விளக்கு அமைத்தும், எரியாத மின் விளக்கை சரி செய்தல், குடிநீர் குழாய் பழுதடைந்ததை சரி செய்து தருதல் மற்றும் சிமெண்ட் சாலை அமைத்துத் தருதல், கிராமத்தில் உள்ள இளைஞர்களுக்கு விளையாட்டு மைதானம் அமைத்து விளையாட்டுப் பொருட்கள் வழங்கியும் இது  போன்ற கிராமத்துக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று ஊராட்சி செயலாளர் முதல் முதலமைச்சர், கவர்னர் வரை பதிவு அஞ்சல் மூலம் மனுக்கள் எழுதி புகார் கொடுக்கப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


இதில் பத்து ரூபாய் இக்கத்தின் மாற்றத்திற்கான திறனாளிகள் அணியின்  மாநில ஒருங்கிணைப்பாளர் திரு செல்வம் அவர்கள் முன்னிலையிலும், இக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு மாவட்ட, ஒன்றிய, ஊராட்சி பொறுப்புக்கள் கொடுக்கப்பட்டும்,  உறுப்பினர் அட்டை வழங்குவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டது. பின்பு இக்கூட்டத்தில் இயக்கத்தின்  நிர்வாகிகள் சுரேஷ், ரா.கார்த்திக், அ.முருகன், சி.முத்துராஜ், கோபி, மா.கார்த்திக்  ரா.முருகன், மாதையன், ராஜி, ரவி   போன்ற இயக்கத்தின் பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies