Type Here to Get Search Results !

பாலக்கோடு தளவாய்அள்ளி புதுரில் சட்டவிரோதமாக அரசு மதுபானம் விற்ற பெண் கைது.


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சுற்று வட்டார பகுதிகளில் சட்டவிரோதமாக அரசு மது பானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக பாலக்கோடு  போலீசாருக்கு இரகசிய  தகவல் கிடைத்தது.


அதனை தொடர்ந்து நேற்று மாலை  போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாலக்கோடு அருகே தளவாய்அள்ளி புதுரில் வீட்டில் வைத்து மதுபானங்களை விற்பனை செய்தது தெரிய வந்தது.


அவரை  பிடித்து விசாரித்ததில் தளவாய்அள்ளி கிராமத்தை சேர்ந்த சுப்ரமணி என்பவரின் மனைவி சாந்தா (வயது. 55) என்பதும் வீட்டில் வைத்து அரசு மது பானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததும் தெரிய வந்தது, உடனடியாக அவரை கைது செய்து அவரிடமிருந்து 20  குவாட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies