தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கோவிலூர் கிராமத்தில் 2ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் புரணமைக்கப்பட்டு ஸ்ரீ குந்தியம்மன், பஞ்சபாண்டவர் சுவாமி கண் திறப்பு மற்றும் கும்பாபிஷேக விழா கடந்த 19ம் தேதி கணபதி பூஜை உடன் துவங்கிய விழா அதிகாலை மங்கள இசை, கோபூஜை, இரண்டாம் கால யாக பூஜை, நாடி சந்தானம், ஸ்பர்சாஹுதி, பஞ்ச சூக்த பாராயணம், திரவியம் மகா ஹோமம் மஹா பூர்ணாஹுதி, தீபாராதனை அடுத்து கடகம் புறப்பாடு பஞ்சபாண்டவர் உற்சவர் கண் திறப்பு ஸ்ரீ குந்தியம்மன் மகா கலசாபிஷேகம் அலங்காரம் மகா தீபாராதனை நடைபெற்றது.
இதையடுத்து சுவாமிக்கு திருகல்யாணமும், கோவிலில் அலங்கரிக்கப்பட்ட பஞ்சபாண்டவர், சுவாமி திருவீதி உலாவும் நடைபெற்றது.திருவீதி உலாவில் தலைமீது சுமந்து கிராமத்தின் வழியாக புறப்பட்டு ஒவ்வொரு தெய்வங்களும் பூஜை நடைபெற்றது. இத்திருவிழாவில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து சுமார் 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் அனைவருக்கும் அன்னாதம் செய்யப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர். பொதுமக்கள் பக்தர்கள் பாதுகாப்பிற்காக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
.gif)


