அரூர் அருகே உள்ள சந்திராபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அரசு பள்ளி ஆசிரியர்களின் தன்னார்வ கூட்டுமுயற்சியால் உருவான இணைய வழி வானொலியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர்.
தலைமை ஆசிரியர் இராதாகிருஷ்ணன் மற்றும் ஆசிரியை பா.த.சென்னம்மாள் மற்றும் இருபால் ஆசிரியர்கள் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தி பாராட்டு சான்றிதழ் வழங்கினர்.
மாணவர்களை ஊக்கப்படுத்திய வழிகாட்டி ஆசிரியர் சென்னம்மாள் அவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது.
.gif)

