தர்மபுரி மற்றும் பெங்களூரில் செயல்படும் பிரபல கல்வி நிறுவனத்தின் அலுவலகங்களில் 77வது சுதந்திரதினம் கொண்டாடப்பட்டது. விழாவுக்கு நிறுவனத்தின் இயக்குநர் ஆர்.சதீஷ் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் கல்வி நிறுவன அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு இனிப்பு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர்கள், நித்யா, ஹேமமாலினி, விஸ்வநாதன், ஆர்த்தி, ஸ்ரீஜா, சோனியா, கஸ்தூரி, கவியரசி, அபினேஸ்வரி மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.