தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அடுத்து கே.ஈச்சம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட ஈ.அக்ரஹாரம் கிராமத்தில் 77 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி, விளையாட்டு போட்டி மற்றும் சமூக பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது மற்றும் சமூக பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சியின் பெண்கள் வன்கொடுமை குறித்தும், போதைப் பொருட்கள் தடுப்பு, பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு குறித்தும் பேரணி நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் ஆதிமூலம், சுரேஷ்பாபு, சக்திவேல், சரிதா, சசி, மாவட்ட தீயணைப்பு அலுவலர் (ஓய்வு) தீ.மதியழகன், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் நாராயணன், சமூக ஆர்வலர் சுரேஷ், டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் பசுமை தேசம் இளைஞர் நற்பணி மன்ற தலைவர் நா.சின்னமணி, இளைஞர்கள் மற்றும் மாணவ மாணவிகள் ஊர் பொதுமக்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். இறுதியில் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் இனிப்புகள்வழங்கி சுதந்திர தின விழாவை கொண்டாடப்பட்டது.