தருமபுரி அடுத்த பள்ளப்பட்டி மருதம் நெல்லி பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகங்களில் கோலாகலமாக சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. மருதம் நெல்லி கல்விக் குழுமத்தின் தாளாளர் டாக்டர் கா கொடியேற்றி மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கினார் மேலும் சுதந்திர தின விழாவை முன்னிட்டு பாரத தாயின் மணிக்கொடியை தாங்கி நிற்பவர்கள் வாழும் தலைமுறைகளா! வாழ்ந்த தலைமுறைகளா! என்ற தலைப்பில் சிறப்புப் பட்டிமன்றம் நடைபெற்றது. நிகழ்விற்கு தாளாளர் தலைமை வகித்தார்.
மருதம் நெல்லி பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் நா.மகேந்திரன் மற்றும் ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் சி.பரஞ்சோதி முன்னிலை வகித்தனர். பட்டிமன்றத்தின் நடுவராக இளந்தென்றல் சி.சரவணன் இருந்தார்.
வாழும் தலைமுறைகளே என்ற அணியில் பட்டதாரி ஆசிரியர் ரேவதி, பேச்சுக்காதலன் சந்தோஷ், மாணவர்கள் சுமித்ரா, பூவரசன் உள்ளிட்டோர் பேசினர். வாழ்ந்த தலைமுறைகளே என்ற அணியில் பேச்சாளர் கோகுல், ஜாஸ்மின், சிவசக்தி, சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்டோர் பேசினர். நிகழ்வில் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ,மாணவிகள், கல்லூரி நிர்வாக அலுவலர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.