தருமபுரி மேற்கு மாவட்டம் அரூரில் கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி கலைஞரும் கலைத்துறையும் என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தருமபுரி மாவட்ட திமுக சார்பில் கலை இலக்கிய பகுத்தறவு பேரவை சார்பில் கலைஞரும் கலைத்துறையும் என்னும் கருத்தரங்கு நடைபெற்றது, இந்நிகழ்ச்சி திமுக மேற்கு மாவட்ட செயலாளர் பி.பழனியப்பன் தலைமை தாங்கினார்.
அக்கட்சியின் கலை இலக்கிய பகுத்தறவு பேரவை மாவட்ட அமைப்பாளர் சி.தேசிங்குராசன் வரவேற்புரை ஆற்றினார், மாவட்ட துணை செயலாளர் செ.கிருஷ்ணகுமார், ஒன்றிய செயலாளர்கள் ஆர்.வேடம்மாள் கோ.சந்திரமோகன், வே.சௌந்திரராசு , அரூர் நகர செயலாளர் முல்லைரவி, பேரூராட்சி தலைவர் இந்திராணிதனபால், துணை தலைவர் சூர்யாதனபால், கலை இலக்கியப் பகுத்தறிவு பேரவை மாவட்ட நிர்வாகிகள் எஸ்.மணி, கருணாநிதி, அருண், உதயசூரியன், ரஜினிமாறன், சின்ராஜ், தம்பிதுரை, பாண்டுரங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு இயல் இசை நாடகமன்ற தலைவரும், திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவையின் தலைவருமான வாகைசந்திரசேகர் கலந்து கொண்டு கலைஞரும் கலைத்துறையும் என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
இந்நிகழ்ச்சியில் அக்கட்சியின் மாநில தீர்மான குழு செயலாளர் எம்.எஸ். விஸ்வநாதன், ஆதிதிராவிடர் நலகுழு துணை செயலாளர் எஸ்.ராஜேந்திரன், மாநில வர்த்தகர் அணி துணை செயலாளர் அ.சத்யமூர்த்தி, மாவட்ட அவைதலைவர் கே.மனோகரன், மாவட்ட துணை செயலாளர் ஆ.மணி, மாவட்ட துணைசெயலாளர் ராஜகுமாரி, மாவட்ட பொருளாளர் எம்.எம்.முருகன், விவசாய அணி மாவட்ட தலைவர் சி.தென்னரசு, முகமது அலி, ஐடிவிங் தமிழழகன், ஆதம் முஜீப், திருவேங்கடம், நகர நிர்வாகிகள் செல்வதயாளன், விண்ணரசன், மோகன், கணேசன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் இறுதியில் கலை இலக்கிய பேரவையின் மாவட்ட தலைவர் பி.அன்பழகன் நன்றி கூறினார்.