பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றியக்குழு தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது தொடர்பாக மனு வழங்கிய ஒன்றிய கவுன்சிலர்கள். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 7 ஆகஸ்ட், 2023

பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றியக்குழு தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது தொடர்பாக மனு வழங்கிய ஒன்றிய கவுன்சிலர்கள்.


தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் ஊராட்சி ஒன்றியத்தில் 19 ஒன்றிய கவுன்சிலர்கள் உள்ளனர். ஒன்றிய குழு தலைவராக பாமக வை சேர்ந்த கவிதா ராமகிருஷ்ணன் உள்ளார். இன்று திமுக, அதிமுக, சிபிஎம், பாமகவை சேர்ந்த 17 ஒன்றிய கவுன்சிலர்கள் சேர்ந்து ஒன்றியக்குழு தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது தொடர்பாக பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில்  துணை பிடிஓவிடம் மனு வழங்கினார்கள்.

இந்த மனுவில் ஒன்றிய கவுன்சிலர்கள் தெரிவித்துள்ளதாவது, ஒன்றிய குழு தலைவர் கவிதா ராமகிருஷ்ணன் ஒன்றிய குழு உறுப்பினர்களிடம் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக செயல்படுகிறார் எனவும், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மேற்கொள்ளப்படும் நலத்திட்டங்கள், மக்கள் பணிகளை முறைக்கேடாக வட்டார வளர்ச்சி அலுவலர் உடன் சேர்ந்து ஒப்பந்தங்கள் குறித்து யாருக்கும் தெறியாமல் ஒருதலைபட்சமாக அவரது கணவர் பெயரிலும் தனக்கென வேண்டப்பட்ட ஒப்பந்ததாரர்களை வைத்து மேற்கொள்கிறார் எனவும், சமீபகாலங்களில் ஒகேனக்கல் வளர்ச்சி நிதியை தோராயமாக 2 கோடிக்கு மேல் மறைமுக ஒப்பந்தம் அடிப்படையில் பணிகள் மேற்கொள்ள முறைகேடு செய்துள்ளார், அப்படி வழங்கப்படும் பணிகள் அனைத்தும் அவரது கணவர் ராமகிருஷ்ணன் அதிக கமிசன் கேட்டு பெறுவதால் தரமற்ற வேலைகளையே ஒப்பந்ததாரர்கள் செய்கின்றனர்,  மேலும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தால் ஒதுக்கப்படும் பொது நிதி மற்றும் 15வது நிதிமானியம் உட்பட அனைத்து நிதித்திட்டங்களால் மேற்கொள்ளப்படும் பணிகள் அனைத்தும் ஒன்றிய குழு உறுப்பினர்களின் ஒப்புதல் இல்லாமலும், ஆலோசனைகள் மேற்கொள்ளாமலும் தீர்மாணங்கள் கொடுத்து முறைகேடு செய்கின்றார்.


இவற்றை ஒன்றியகுழு உறுப்பினர்கள் அனைவரும் கேட்டும் இதுவரை எந்தவித பதிலும் கொடுக்காமலும், ஏவலம் செய்யும் விதமாக நடந்து கொள்கிறார் என தெரிவித்துள்ளனர்.


ஆகவே, ஒன்றிய குழு உறுப்பினர்கள் நாங்கள் அனைவரும் ஒன்றிய குழு தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் வழங்குகிறோம். உடனடியாக சிறப்பு கவண ஈர்ப்பு கூட்டம் ஏற்பாடு செய்து நம்பிக்கையில்லா தீர்மானம் மீது குரல் வாக்கெடுப்பு நடத்திடுமாறும், புதிய ஒன்றிய குழு தலைவர் தேர்வு நடைபெற வழிவகை செய்ய வேண்டும் என இந்த மனுவில் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad