ஒரு லட்ச ரூபாய் லஞ்சம் கேட்கிறார்; இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் மீது கணவன் மனைவி புகார். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 7 ஆகஸ்ட், 2023

ஒரு லட்ச ரூபாய் லஞ்சம் கேட்கிறார்; இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் மீது கணவன் மனைவி புகார்.


தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகேவுள்ள எர்ரகொல்லனூர் கிராமத்தை சேர்ந்த ஈஸ்வரன் தனது மனைவியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தி்ல் புகார் மனு ஒன்றினை அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


எட்டியாம்பட்டி கிராமத்தி்ல் இந்து அறநிலையத்துறை கட்டுபாட்டிலுள்ள அருள் மிகு பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூசாரியாக கடந்த 25 ஆண்டு காலம் பணயாற்றி வந்ததாகவும், ஆன்மீகத்தின் பேரில் ஏற்பட்ட நாட்டத்தினால் தனது சொந்த பணத்தை செலவு செய்தும் கோவிலை கட்டியதாகவும், இந்த நிலையில் தனக்கும் தனது சகோதரருக்கும் ஏற்பட்ட தனிபட்ட தகராறு காரணத்தை காட்டி பூசாரி பணியிலிருந்து நிறுத்தபட்டு விட்டதாக தெரிவிக்கிறார், இது தெடர்பாக சம்மந்தபட்ட துறை அதிகாரிகளை அணுகிய போது, மீண்டும் பூசாரி பணி செய்ய உத்தரவு வழங்க வேண்டுமானால் தனக்கு ஒரு லட்ச ரூபாய் லஞ்சம் தந்தால் மீண்டும் பணி தருவதாக அறநிலையத்துறை உதவி ஆணையர் உதயக்குமார் தெரிவிப்பதாகவும், இது தொடர்பாக பருவதனஅள்ளி கிராமத்தை சேர்ந்த பாலு என்பவர் தனக்கு நெருக்கடி கொடுத்து வருவதாகவும், லஞ்சம் கேட்கும் அதிகாரி மற்றும் பாலு மீதும் துறை உயரதிகாரிகளும், தருமபுரி மாவட்ட நிர்வாகமும் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகார் மனுவில் குறிப்பட்டிருக்கிறார் முன்னாள் கோவில் பூசாரி ஈஸ்வரன்.


பூசாரி பணிக்கு இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்கிறார் என புகார் எழுந்திருப்பது தருமபுரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad