இம்முகாமானது 12.08.2023 (சனிக்கிழமை) வரை நடைபெறுகின்றது. இந்த சிறப்பு தடுப்பூசி முகாமில் பிறந்த குழந்தை முதல் 2 வயது வரை உள்ள குழந்தைகள், 2 -5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள் செலுத்தவேண்டிய தடுப்பூசித் தவணைகள் உரிய காலத்தில் செலுத்த தவறியவர்களை கண்டறிந்து தடுப்பூசி செலுத்துவதாகும்.
தருமபுரி மாவட்டத்தில் வருடந்தோறும் 24000 குழந்தைகளுக்கு சுகாதார மையங்களின் வாயிலாக தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் தடுப்பூசி செலுத்தப்பட்டு பயன்பெற்று வருகின்றனர். இத்திட்டத்தில் விடுபட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள் பயன்பெறும் வகையில் தருமபுரி மாவட்டத்தில் 225 துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அதன் பகுதிக்குட்பட்ட அங்கன்வாடி மையங்களில் வருகின்ற 12.08.2023 (சனிக்கிழமை ) வரை காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை மிஷன் இந்திரதனுஷ் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.
ஆகவே தருமபுரி மாவட்டத்தில் உள்ள பொது மக்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளுக்கு உரிய காலத்தில் தடுப்பூசி செலுத்தப்படாமல் இருப்பின் உடனடியாக தங்கள் பகுதிக்கு அருகில் உள்ள துணை சுகாதார நிலையம் அல்லது அங்கன்வாடி மையத்திற்கு சென்று தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தி குழந்தைகளின் இன்னுயிரை நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக