Type Here to Get Search Results !

பாலக்கோட்டில் அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி.


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பஸ் நிலையம் முன்பு அதிமுக தெற்கு  ஒன்றிய செயலாளர் கோபால் தலைமையில் நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியைக்  கொண்டாடினர்.

எடப்பாடி பழனிசாமி கூட்டிய அதிமுக பொதுக்குழு செல்லாது என்றும், பன்னீர்செல்வம் உள்ளிட்ட சிலரை கட்சியில் இருந்து நீக்கிய சிறப்பு தீர்மானத்திற்க்கு தடை விதிக்க கோரி பன்னீர்செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.


இதனை விசாரித்த சென்னை உயர்நீதின்ற நீதிபதி எடப்பாடி பழனிசாமி தலைமையிலான பொதுக்குழு கூட்டம் செல்லும் என்றும், பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை நீக்கிய சிறப்பு தீர்மானத்திற்க்கு தடை விதிக்க முடியாது என தீர்ப்பளித்தது, இதனை வரவேற்று பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பும் வழங்கியும் கொண்டாடினர்.


இந்நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய செயலாளர் ரங்கநாதன், மாவட்ட அவைத் தலைவர் நாகராசன், அதிமுக நிர்வாகிகள் வீரமணி, சுப்ரமணி, கொளந்தை, ரவிச்சந்திரன், சுந்தரபாண்டி, கணேசன் உள்ளிட்ட திரளான கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies