77வது சுதந்திர தின விழாவினை அடுத்து தருமபுரி நகராட்சி தொடக்கப்பள்ளிக்கு மேலங்கி வழங்கும் நிகழ்வு மை தருமபுரி அமைப்பினரால் நடைப்பெற்றது.
77வது சுதந்திர தின விழா கொண்டாட்டமாக மை தருமபுரி NGO அமைப்பின் சார்பாக தருமபுரி கோல்டன் தெருவில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளி மாணவர்கள் 35 நபர்களுக்கு மை தருமபுரி அமைப்பின் சார்பாக மேலங்கி வழங்கப்பட்டது. மேலங்கி வழங்கும் நிகழ்விற்கு நகர மன்ற உறுப்பினர் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் திரு. க.புவனேஸ்வரன், ராமதுரை, ரங்கநாதன், விஜயலட்சுமி உமாசங்கர் ஆகியோர் தலைமை தாங்கினார்.
மை தருமபுரி அமைப்பின் சார்பாக *சதீஸ் குமார் ராஜா, தமிழ்செல்வன், அருணாசலம்,ஹரீஷ் ராகவேந்திர், மை தருமபுரி மகளிர் அமைப்பின் சமூக சேவகி அம்பிகா, தென்றல்* ஆகியோர் மேலங்கியை வழங்கினர் இப்பள்ளி தலைமையாசிரியர் திருமதி.முல்லைக்கொடி மற்றும் உதவி ஆசிரியர் பூங்கொடி ஆகியோர் மாணவர்களை ஒருங்கிணைத்தனர்.