77வது சுதந்திர தின விழா மற்றும் 184 வது உலக புகைப்பட தின விழா சிறப்பாக தருமபுரி மாவட்ட புகைப்பட கலைஞர்கள் சங்கம் சார்பாக மை தருமபுரி NGO, மாருதி ரத்த வங்கி, மெடால் ரத்தப் பரிசோதனை மையம், நதியா கண் பரிசோதனை மையம் இணைந்து ரத்ததான முகாம் மற்றும் மருத்துவ முகாம் நடந்தது. இதில் புகைப்பட கலைஞர்கள் சங்கம் சார்பாக 50 நபர்களும், மை தருமபுரி NGO சார்பாக 27 நபர்களும் இணைந்து சுதந்திர தின விழா கொண்டாட்டமாக 77 நபர்கள் இரத்ததான கொடை வழங்கினர்.
முகாமிற்கு புகைப்பட கலைஞர்கள் சங்க மாநில தலைவர் திரு.சிவக்குமார், மாநில இணை செயலாளர் திரு.அசோக், மண்டல செயலாளர் திரு.சக்கரவர்த்தி, தருமபுரி மாவட்ட தலைவர் ஜெயம் சுரேஷ், செயலாளர் கன்னியப்பன், பொருளாளர் வேடியப்பன் மற்றும் அமைப்பாளர் திரு.ஆனந்த் ஆகியோர் தலைமை தாங்கினார்.
இதில் சிறப்பு விருந்தினராக மை தருமபுரி அமைப்பினர் சதீஸ் குமார் ராஜா, தமிழ்செல்வன், அருணாசலம், ஹரீஷ் ராகவேந்திர், ஆசிரியர் பிரேமா, சமூக சேவகி அம்பிகா, தென்றல், மாருதி இரத்த வங்கி வெங்கடாஜலம், மெடால் பாலாஜி, நதியா கண் பரிசோதனை மையம் ஆகியோர் கலந்து கொண்டனர்.