Type Here to Get Search Results !

பென்னாகரம் ஒன்றியம் சின்னப்பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டம் தொடக்க நிகழ்வு.


தருமபுரி மாவட்டம் பென்னாகரம் ஒன்றியம் சின்னப்பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டம் தொடக்க நிகழ்வு செங்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் சி. மணி தலைமையில் வார்டு உறுப்பினர்கள் முனியப்பன் நரசிம்மன் ஆகியோர் முன்னிலையில் தொடக்க விழா நடைபெற்றது. 


இந்நிகழ்வில் பள்ளி தலைமையாசிரியர் மா. பழனி காலை சிற்றுண்டி திட்டத்தின் நோக்கம் மற்றும் சிறப்புகள் பற்றி கூறினார்.  கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் இதை நன்கு பயன்படுத்திக் கொண்டு குழந்தைகள் கற்றலில் ஆர்வத்தோடு செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.  ஊர் பொதுமக்கள் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் சமையலர்கள் உள்ளிட்ட பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies