தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருந்ததியர் தெருவில் ஊர் மாரியம்மன் கோவிலில் விளக்கு பூஜை மற்றும் வரலட்சுமி பூஜை நடைப்பெற்றது.
நேற்று முன்தினம் வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு 50 க்கும் மேற்பட்ட பெண்கள் ஊர் மாரியம்மன் கோவிலில் ஒன்று கூடி விளக்கு பூஜை மற்றும் வரலட்சுமி பூஜை செய்து, பெண்களின் மாங்கல்ய பாக்யம் நிலைக்கவும், குழந்தைகள் நோய் நொடி இன்றி ஆரோக்கியமாக வாழவும், உலக நன்மை வேண்டியும் 1008 மந்திரங்கள் கூறி பூஜை செய்து அம்மனை வழிபட்டனர்.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.