Type Here to Get Search Results !

பாப்பாரப்பட்டி அடுத்த பொடுத்தம்பட்டியில் ஸ்ரீ மாரியம்மன் திருவிழா.

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அடுத்த சோமனஅள்ளி அருகே பொடுத்தம்பட்டி கிராமத்தில் ஸ்ரீ மாரியம்மன் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் வெகு விமர்சையாக கொண்டாடுவது வழக்கம். 


நேற்று அம்மனுக்கு கூல் ஊற்றுதல் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இன்று அதிகாலையில்  ஸ்ரீ மாரியம்மனுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்யப்பட்டு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.


மேலும் அம்மன் கரகம் கங்கை பூஜை செய்து பின்பு  கரகம் வீடு வீடாக ஊர்வலமாக சென்ற பிறகு ஊர்மக்கள் மேளதாளம் முழங்க ஸ்ரீ மாரியம்மனுக்கு  மாவிளக்கு  எடுத்து  வேண்டுதலை நிறைவேற்றி அம்மனே வழிப்பாடு செய்தனர். இவ்விழாவிற்க்கான ஏற்பாடுகளை பொடுத்தம்பட்டி ஊர் கவுண்டர். மந்திரி கவுண்டர் ஊர்மக்கள் செய்திருந்தனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies