Type Here to Get Search Results !

பாலக்கோடு தீர்த்தகிரி நகரில் அருள்மிகு ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவில் 17 - ஆம் ஆண்டு திருவிழா இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தீர்த்தகிரி நகரில் எழுந்தருளியுள்ள   அருள்மிகு ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவில் 17 - ஆம் ஆண்டு திருவிழா இன்று  வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.


அதிகாலை முதலே அம்மனுக்கு பல்வேறு திரவியங்களான அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்யப்பட்டு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அம்மனுக்கு நேர்த்தி  கடனை செலுத்தும் விதமாக மாவிளக்கு எடுத்தல்,  பால்குடம் எடுத்தல், அலகு குத்துதல், தீச்சட்டி கையில் ஏந்தியபடி  தீ மிதித்து, பூ கரகம் எடுத்தனர். 


பக்தர்கள் அம்மன் வேடம், காளிவேடம் அணிந்தும்,  மேளதாளம் முழங்க  ஊர்வலமாக சென்று கோழி, கிடா ஆகியவற்றை பலியிடட்டு நேர்த்தி கடன் செலுத்தினர், கோவிலுக்கு வந்திருக்கும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 


இவ் விழாவிற்க்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் இளைஞர்கள்  செய்திருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies