தருமபுரி மாவட்டம், பென்னாகரம் ஊராட்சி ஒன்றியம், கூத்தப்பாடி ஊராட்சியில் ஆகஸ்ட் 15 ம் நாள் 77வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பொச்சாரம்பட்டியில் கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
கிராம சபை கூட்டத்திற்கு கூத்தப்பாடி ஊராட்சி மன்ற தலைவர் கே. பாஸ்கர் தலைமை தாங்கினார். கிராம சபை கூட்டத்தில் ஊராட்சியில் நடைபெற்று வரும் திட்ட பணிகள் மற்றும் வரவு,செலவு கணக்குகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
கிராம சபை கூட்டத்தில் 100 நாள் வேலை, குடிநீர், சீரான மின்சாரம் தட்டுப்பாடு இன்றி வழங்கவும், புதிய சாலைகள் அமைக்கவும், மின்சாரம் இல்லாத பகுதிகளில் புதிய மின்கம்பம் அமைக்க ஏற்பாடு செய்து மின் இணைப்பு வழங்க வேண்டும் எனவும்,பொது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து கொடுக்க வேண்டும் எனவும், ஊரட்சியின் வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் கிராம சபை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு பொது மக்கள் முன்னிலையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பொதுமக்களிடம் தீர்மானம் பதிவு புத்தகத்தில் கையொப்பம் பெறப்பட்டது.
கூத்தப்பாடி கிராம இளைஞர்கள் சார்பாக உடற்பயிற்சி கூடம் மற்றும் விளையாட்டு மைதானம் வேண்டி மனு வழங்கப்பட்டது மனுவை பெற்றுக் கொண்ட ஊராட்சி மன்ற தலைவர் பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி.விஜயலட்சுமி, கூத்தப்பாடி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மணி, ஊராட்சி செயலாளர் குமரன், கூத்தப்பாடி ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள், கூத்தப்பாடி ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், கூத்தப்பாடி கிராம நிர்வாக அலுவலர், அளேபுரம் நிர்வாக அலுவலர் கோபி, ஊராட்சிக்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், வேளாண்மை துறை அதிகாரிகள், நியாயவிலைக் கடை பணியாளர்கள், சமூக ஆர்வலர்கள், காவல்துறை அதிகாரிகள், ஊர் பொதுமக்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.