ஆனால் செல்வம் கடன் தொகையை கட்டாததால் கடந்த ஜூலை30. 2022ம் ஆண்டு வங்கி நிலத்தை பகிரங்க பொது ஏலத்திற்க்கு உட்படுத்தி 1.62 கோடி ரூபாய்க்கு பாலக்கோட்டை சேர்ந்த தொழிலதிபர் பி.என்.பி.ஸ்ரீதர் என்பவருக்கு விற்பனை செய்தது, மேற்கண்ட சொத்தை வங்கி நில அளவை செய்து சுவாதினம் கொடுக்க செல்வம் தரப்பினர் ஒத்துழைப்பு வழங்காமல் தகராறில் ஈடுபட்டு வந்தனர்.
இதனால் வங்கியானது தர்மபுரி மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் முறையிட்டது, நீதிமன்றம் நிலத்தை அளவீடு செய்து உரியவருக்கு சுவாதீனம் கொடுக்க உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து இன்று காலை நீதிமன்ற நியமித்த அட்வகேட் கமிஷனர் மற்றும் வங்கி வழக்கறிஞர் ரமேஷ்குமார் முன்னிலையில் தாசில்தார் ராஜா, வி.ஏ.ஓ.குமரன், சர்வேயர்கள் நிலத்தை அளவீடு செய்ய சென்றனர்.
அப்போது செல்வம் தரப்பினர் தவறான சர்வே எண் கொண்ட நீதிமன்ற ஆனையை பெற்றுள்ளீர்கள், எனவே நிலத்தை அளவீடு செய்ய அனுமதிக்கமாட்டோம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டு அதிகாரிகளை தடுத்து நிறுத்தினர்.
பின்னர் போலீசார் பாதுகாப்புடன் நிலம் அளவீடு செய்து பாலக்கோடு இந்தியன் வங்கி வசம் சுவாதீனம் ஒப்படைக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
.gif)

