தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அடுத்த கெண்டேயன அள்ளி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி வெங்கடேசன் (60) இவரது மனைவி ரோஜா, இவர்களுக்கு ஒரு மகன் 2 மகள்கள் உள்ளனர். நேற்று அதே பகுதியை சேர்ந்த மணிவண்ணன் என்பவரின் வாழைத்தோட்டத்திற்க்கு விவசாய பணிக்காக சென்றார்.
வேலை செய்து கொண்டிருக்கும் போது வாழை தோட்டத்தில் இருந்த பாம்பு வெங்கடேசனை கடித்தது, இவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் வெங்கடேசனை பாம்பு கடித்தது தெரிந்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக மாரண்டஅள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இவரை பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே வெங்கடேசன் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
தகவலறிந்த மாரண்டஅள்ளி போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து இன்று வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.