தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தனியார் திருமண மன்டபத்தில் திமுக மத்திய ஒன்றியம் மற்றும் பாலக்கோடு பேரூர் கழக BLA-2 வாக்குசாவடி முகவர்களுக்கு பயிற்சி மற்றும் ஆலோசனை கூட்டம்,ஒன்றிய கழக செயலாளர் முனியப்பன், பேரூர் கழக செயலாளர் பி.கே.முரளி ஆகியோர் தலைமையில் நடைப்பெற்றது.
இக்கூட்டத்திற்க்கு மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் பழனியப்பன், கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர், இக்கூட்டத்தில் மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் அவர்கள் கலந்து கொண்டு BLA - 2 வாக்குசாவடி முகவர்களுக்கான பயிற்சி குறித்து விளக்கமளித்தார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக வேளாண் மற்றும் உழவர் நல துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம், கலந்து கொண்டு பேசுகையில் ஒவ்வொரு வார்டு பகுதிகளிலும் புதிய வாக்காளர்களை கண்டறிந்து வாக்காளர் பட்டியலில் அவர்களின் பெயர் சேர்க்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.
மேலும் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி, வார்டு உறுப்பினர் என அனைவரும் திமுகவை சேர்ந்தவர் பதவியில் இருப்பதால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தர்மபுரி தொகுதியில் திமுக அமோக வெற்றி பெறும் என்றும் அதற்கு வாக்குசாவடி முகவர்களின் பணி இன்றியமையாதது எனவும் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாநில விவசாய அணி துணை செயலாளர் சூடப்பட்டி சுப்பிரமணி, மாநில வர்த்தக அணி துணை செயலாளர் சத்தியமூர்த்தி, மாநில ஆதிதிராவிடர் அணி துணை அமைப்பாளர் கேஸ் ராஜேந்திரன், மாவட்ட அவைத் தலைவர் மனோகரன், மாவட்ட பொருளாளர் முருகன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் மனோகரன், பொதுக்குழு உறுப்பினர் சையத் முர்த்துஜா, ஒன்றிய செயலாளர்கள் பஞ்சப்பள்ளி அன்பழகன், கிருஷ்ணன், அடிலம் அன்பழகன், பேரூர் கழகச் செயலாளர் வெங்கடேசன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் சந்தர், மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் அருள் பிரகாஷ், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ஆனந்தன், கவுன்சிலர் முத்துசாமி, பாலக்கோடு திமுக நிர்வாகிகள் இதாயத்துல்லா, ரவி, பெரியசாமி, மோகன் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.
.gif)

