Type Here to Get Search Results !

பாலக்கோடு தாசில்தார் அலுவலகம் முன்பு கள்ளக்குறிச்சி தாசில்தாரின் இடைக்கால பணிநீக்கத்தை ரத்து செய்ய கோரி வருவாய் துறையினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தாசில்தார் அலுவலகம் முன்பு கள்ளக்குறிச்சி தாசில்தாரின் இடைக்கால பணிநீக்கத்தை ரத்து செய்ய கோரி தமிழ்நாடு வருவாய் துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் வருவாய் துறை ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி ஆக்கிரமிப்புக்களை அகற்றிய கள்ளக்குறிச்சி தாசில்தார் மனோஜ் முளியனை இடைக்கால பணி நீக்கம் செய்த கள்ளக்குறிச்சி கலெக்டரின் ஊழியர் விரோத நடவடிக்கையை கண்டித்தும், இடைக்கால பணி நீக்கத்தை உடனடியாக ரத்து செய்ய கோரியும் தமிழ்நாடு வருவாய் துறை ஊழியர்கள் சங்கத்தின் சார்பாக வருவாய் துறை ஊழியர்கள் காத்திருப்பு போராடத்தில் ஈடுபட்டனர்.


இந்த போராட்டத்தில் பாலக்கோடு தாசில்தார் ராஜா, வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies