தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே சி.எம் புதுரை சேர்ந்த கட்டிட தொழிலாளி சரவணன் (வயது. 24) இன்னும் திருமனம் ஆகவில்லை. இவர் அடிக்கடி செல்போன் பயன்படுத்துவதை அவரது தாய் கண்டித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு சரவணன் தூங்காமல் வெகு நேரம் செல்போன் பயன்படுத்தியுள்ளார்.
இதனை அவரது தாய் நாகவள்ளிகண்டித்துள்ளார், இதனால் நேற்று முழுவதும் மனமுடைந்த காணப்பட்ட சரவணன் இன்று வீட்டில் உள்ள பேனில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்த மாரண்டஅள்ளி போலீசார்னின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து இன்று வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.