தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் ஒன்றியம் நவலை ஊராட்சியில் முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் மு. கருணாநிதியின் 5.ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
இதில் தர்மபுரி மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் A.சாமி அவர்கள் தலைமையில் கலைஞர் கருணாநிதி அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் கமலேசன், பரமசிவம், கார்த்திகேயன், தேவி சங்கர், சின்னத்தம்பி, கந்தசாமி, வேடியப்பன், மாது, ராஜா, நவலை திமுக உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்