தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை வளாகத்தினுள் செயல்பட்டு வரும் ஆங்கில பள்ளியானது, சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் மற்றும் ஆலை தொழிலாளர்கள் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு துவங்கப்பட்ட 40 வருடம் பழமையான பள்ளியாகும்.
நல்ல நிலையில் இயங்கி கொண்டிருந்த இப்பள்ளியானது சமீப காலமாக கல்வி தரம் குறைந்ததால் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இப்படியே சென்றால் பள்ளியை இழுத்து மூடும் நிலைக்கு தள்ளப்படும் என விவசாயிகள் கவலைப்படுகின்றனர்.
தற்போது பள்ளி முதல்வராக உள்ள ராசுக்குட்டி தனக்கு வேண்டிய, வேண்டாத ஆசிரியைகள் என பாகுபாடு பார்த்து செயல்படுவதாகவும், ஆசிரியைகளை பழிவாங்குவதாகவும், மேலும் விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக பள்ளிக்கு வழங்கிய நிதியில் ஒரு கோடி ரூபாய் அளவில் முறைகேடு செய்துள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே உடனடியாக பள்ளி முதல்வர் ராசுக்குட்டியை பணி நீக்கம் செய்துவிட்டு அதே பள்ளியில் பணிபுரியும் அனுபவமும் தகுதியும் வாய்ந்த ஒருவரை பள்ளி முதல்வராக நியமனம் செய்ய வேண்டும் என 50 க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்று திரண்டு கரும்புஅலுவலர் மற்றும் பள்ளி தாளாளர் கதிரவன் அவர்களிடம் புகார் அளித்தனர்.