தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 10 பேரூராட்சிகளில் பாலக்கோடு பேரூராட்சி சிறந்த பேரூராட்சியாக தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து நேற்று நடைப்பெற்ற சுதந்திர தின விழாவில் செயல் அலுவலர் டார்த்தி, துப்புரவு ஆய்வாளர் ரவிந்திரன் ஆகியோரிடம் மாவட்ட ஆட்சியர் சாந்தி கேடயம் வழங்கினார்.
அதனை தொடர்ந்து பேரூராட்சி தலைவரிடம் கேடயம் வழங்கப்பட்டது. அதனை பெற்று கொண்டு பேருராட்சி செயல் அலுவலர் துப்புரவு ஆய்வாளர், அலுவலக ஊழியர்கள் மற்றும் தூய்மைகாவலர்களுக்கு பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி அவர்கள் வாழ்த்து தெரவித்தார்.