தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியத்திற்க்குட்பட்ட புலிகரை ஊராட்சியில் உள்ள கோவிலுர் கிராமத்தில் குந்தியம்மன் கோவில் வளாகத்தில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று 15 வது நிதிக்குழு மாணியத்தில் 3 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 1500 லிட்டர் கொள்ளவு கொண்ட குடிநீர்தேக்க தொட்டி கட்டப்பட்டது, நீர் தேக்கதொட்டியில் கடந்த 3மாதமாக தண்ணீர் இல்லாததால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
இக்கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பக்தர்களின் அடிப்படை வசதியான குடிநீர், பொதுகழிப்பிட வசதி இல்லாததால் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொண்டு குடிநீர் மற்றும் பொதுகழிப்பிடம் அமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.