தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியத்திற்க்குட்பட்ட பி.செட்டிஅள்ளி, பேளாரஅள்ளி, ஜெர்தலாவ், எர்ரனஅள்ளி உள்ளிட்ட ஊராட்சிகளில் 77வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கிராமசபைக் கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர்கள் கணபதி, ராதா மாரியப்பன், முத்துமணி ஆனந்தன், வளர்மதி ஆகியோர் தலைமையில் நடைப்பெற்றது.
இக் கூட்டத்தில் ஊராட்சியில் நடைப்பெற்ற வரவு செலவு கணக்குகள், நடை பெற்று வரும் திட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது, மத்திய ஜல்சக்தி திட்டத்தின் மூலம் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இனைப்பு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது, ஆனால் பெரும்பாலான இடங்களில் இதுவரை தண்ணீர் வரவில்லை என குற்றம் சாட்டினர்.
எர்ரனஅள்ளி மற்றும் பி.செட்டி அள்ளி ஊராட்சி வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கிராமத்தை இணைக்கும் வகையில் அனுகுசாலை அமைக்கப்பட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள், துனை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துறை சார்ந்த அதிகாரிகள், ஊராட்சி செயலாளர்கள் மற்றும் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.