Type Here to Get Search Results !

பாலக்கோடு இரயில்வே தண்டவாளத்தில் சிக்கி கேட்மேன் உயிரிழப்பு.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பெல்ரம்பட்டி சேர்ந்த இரயில்வே ஊழியர் ஜெகதீசன் (வயது.45), இவரது மனைவி சாந்தி இவர் பாலக்கோடு அருகே செங்கோடபட்டியில் இரயில்வே கேட்கீப்பராக பணியாற்றி வருகிறார், நேற்று முன்தினம் இரவு  வேலை முடிந்து சென்றவர் அதே பகுதியில் உள்ள தீத்தாரஅள்ளி 92 கி.மீட்டர் என்ற இடத்தில் மது போதையில் தண்டவாளத்தை கடக்கும் போது பெங்களுரிலிருந்து நாகர்கோவில் சென்ற விரைவு இரயிலில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


தகவலறிந்த பாலக்கோடு இரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies