Type Here to Get Search Results !

பாலக்கோடு பேரூராட்சி செயல் அலுவலர் டார்த்தி பாலக்கோடு பேருந்து நிலையம் தற்காலிக இடமாற்றம் செய்வதாக அறிவிப்பு.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலைய பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் இப்பகுதியில் நெருக்கடி ஏற்பட்டு பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர், மேலும் கட்டுமான பணிகளை மேற்கொள்வதிலும் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டு வருவால் கட்டுமாண வேலைகள் சுனக்கம் அடைந்து வருகிறது.

எனவே பொது மக்கள் நலன் கருதியும், பஸ் நிலைய சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்கவும் பஸ் நிலையத்தை தற்காலிகமாக திரெளபதி அம்மன் கோவில் முன்பு இடமாற்றம் செய்ய காவல்துறை, வருவாய் துறை, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் முதல்  கட்ட ஆலோசனையும்,  அதனை தொடர்ந்து, வணிகர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், டிராவல்ஸ், ஜே.சி.பி உரிமையாளர்கள், டிரைவர்கள் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு அனைவரின் ஒத்துழைப்புடன் தற்காலிகமாக பேருந்து நிலையம் திரெளபதி அம்மன் கோயில் முன்பு மாற்ற பேரூராட்சி மன்ற கூட்டத்தில்  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


இதையடுத்து நாளை 23ம் தேதி முதல் தற்காலிக பேருந்து நிலையமாக திரெளபதி அம்மன் கோயில் வளாகம் முன்பு செயல்படும் என பேரூராட்சி செயல் அலுவலர் டார்த்தி தெரிவித்துள்ளார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies