Type Here to Get Search Results !

நீடித்த நிலையான கரும்பு சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி.


தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டாரம்,  சோமனஅள்ளி கிராமத்தில் விவசாயிகளுக்கு நீடித்து நிலையான கரும்பு சாகுபடி தொழில்நுட்பம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

இதில் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அருள்மணி அவர்கள் தலைமை வகுத்து கருமை விவசாயிகள் நீடித்து நிலையான கரும்பு சாகுபடி தொழில்நுட்பத்தை கடைப்பிடித்து உற்பத்தியை பெருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அங்கக வேளாண், சிறுதானிய ஆண்டு ஆகியன குறித்து எடுத்துரைத்தார்.

உழவன் செயலி விழிப்புணர்வு மற்றும் பிரதம மந்திரி நிதி உதவி திட்டம் குறித்து  குணசேகரன் வேளாண்மை துணை இயக்குநர், உழவர் பயிற்சி நிலையம், தருமபுரி அவர்கள் விவசாயிகளுக்கு கூறினார்.

பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பாக தெய்வமாக உதவி பேராசிரியர்  கலந்துகொண்டு தர்மபுரி மாவட்டத்தில் பரவலாக கரும்பில் வேர்புழுவின் தாக்குதல் காணப்படுகிறது. இது மறுதாம்பு கரும்பில் அதிகம் இருக்கும் இதனை கட்டுப்படுத்த பேவேரியா பேசியனா அல்லது மெட்டாரைசியம் அனிசோபிலே, லெக்கானி சிலியம் போன்றவற்றை ஒரு கிலோ பூஞ்சாண உயிர் கொல்லிக்கு 100 கிலோ மக்கிய தொழு உரத்துடன் கலந்து, நிழலில் வைத்து இரண்டு மூன்று தினங்களுக்கு பிறகு வயலில் இட்டு நீர் பாய்ச்ச வேண்டும், வளர்ந்த கரும்பு பயிரில் இதனை கட்டுப்படுத்த, பாதிக்கப்பட்ட பயிரினை நீக்க வேண்டும், பயிர் சுழற்சி செய்வதன் மூலம் இதனை கட்டுபடுத்தலாம் எனக் கூறினார். 

கரும்பு பெருக்கு அலுவலர் கதிரவன், பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை, நீடித்த நிலையான கரும்பு சாகுபடி தொழில்நுட்பங்கள் மற்றும் கேசவன் கரும்பு அலுவலர் நாற்றங்காலில் தரமான நாற்று உற்பத்தி, கரும்பு சாகுபடி தொழில் நுட்பங்கள், கரும்பு நுனி கிள்ளுதல், பராமரிப்பு மேலாண்மை ஆகியன குறித்து எடுத்துரைத்தார். 

வேளாண்மை உதவி அலுவலர் விஜயன் துறை ரீதியான மானிய திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தார். பயிற்சியில் வேளாண் அலுவலர் உழவர் பயிற்சி நிலையம், தருமபுரி, கரும்பு உதவி அலுவலர்கள், உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் மற்றும் 40 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies