Type Here to Get Search Results !

அதிமுக மீது தருமபுரி மாவட்ட திமுக மகளிர் அணி நிர்வாகிகள் பென்னாகரம் காவல்நிலையத்தில் புகார்.


கடந்த 20.8.2023 அன்று மதுரையில் நடந்த அதிமுகவின் மாநாட்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களையும், இளைஞர் நலன் மட்டும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களையும் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி கனிமொழி கருணாநிதி அவர்களையும் ஆபாசமாகவும் அவதூறாகவும் பாட்டுப்பாடியும் அநாகரிகமான முறையில் பேசி கொலை மிரட்டல் விடுத்து மிரட்டியதையும் கண்டித்து தருமபுரி திமுக கிழக்கு மாவட்ட மகளிர் சார்பில் பென்னாகரம்  துணை காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் திமுக மாவட்ட மகளிர் அணி தலைவி சோனியா, மாவட்ட துணை அமைப்பாளர் மோகனா முனியப்பன், பென்னாகரம் பேரூராட்சி துணைத்தலைவர் வள்ளியம்மாள் பவுன்ராஜ், கிழக்கு மாவட்ட மகளிர் அணி வலைத்தள பொறுப்பாளர் மணிமேகலை பெருமாள் ஆகியோர் புகார் மனு வழங்கினர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies