தர்மபுரி மாவட்டம் பாலக்கோடுஒன்றியம், பூகானஅள்ளி பஞ்சாயத்திற்க்குட்பட்ட பொம்மரசம்பட்டி கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர்.
இக்கட்டிடத்தின் சுவர்கள் விரிசல்விட்டு எப்பொழுதுவேண்டுமானாலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. மேலும் வகுப்பறை முழுவதும் சுமார் அரை அடி அளவிற்க்கு ஆங்காங்கே பள்ளமாகி உள்ளது, இதனால் குழந்தைகள் நடக்க முடியாமல் கீழே தடுமாறி விழுந்து வருகின்றனர்.
பச்சிளங்குழந்தைகள் சமதளத்தில் அமர முடியாமல் மேடும் பள்ளமும் உள்ள தரையில் அமர்ந்து படித்து வருகின்றனர். இதுகுறித்து சம்மந்தபட்ட அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை,
எனவே மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொண்டு அங்கன்வாடி மைய கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.