தருமபுரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை 2-ஆம் கட்ட விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம் 05.08.2023 முதல் 16.08.2023 வரை நடைபெற உள்ளது.
தருமபுரி ரோட்டரி அரங்கத்தில் விண்ணப்ப பதிவு தன்னார்வலர்களுக்கான 2-ஆம் கட்ட பயிற்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது. தருமபுரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை 2-ஆம் கட்ட விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம் 05.08.2023 முதல் 16.08.2023 வரை நடைபெற உள்ளதை முன்னிட்டு, தருமபுரி ரோட்டரி அரங்கத்தில் விண்ணப்ப பதிவு தன்ணார்வலர்களுக்கான 2-ஆம் கட்ட பயிற்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப, அவர்கள் தலைமையில் இன்று (04.08.2023) நடைபெற்றது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த 24.7.2023 அன்று தருமபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், மகளிருக்கு மாதந்தோறும் ரூ.10007- வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளின் விண்ணப்பங்களை பதிவு செய்யும் முகாமை தொடங்கி வைத்தார்கள். மேலும், விண்ணப்பங்களைப் பயோ மெட்ரிக் முறையில் பதிவு செய்யும் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்து, விண்ணப்பம் செய்ய வந்த மகளிருடன் கலந்துரையாடினார்கள்.
தருமபுரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயண்பெற விண்ணப்பப் பதிவு முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதல்கட்ட விண்ணப்பப் பதிவு முகாம் கடந்த 24.07.2023 முதல் தொடங்கப்பட்டு இன்றுடன் (04.08.2023) நிறைவு பெறுகிறது. இரண்டாம் கட்டமாக 05.08.2023 முதல் 16.08.2023 வரை நடைபெற உள்ளது.
தருமபுரி வருவாய் வட்டத்தில்:-
கடகத்தூர், செட்டிக்கரை, அளேதருமபுரி, நல்லனஅள்ளி, செம்மாண்டகுப்பம், உங்குரானஅள்ளி, கே.நடுஅள்ளி, குப்பூர், அன்னசாகரம், மிட்டாநூலஅள்ளி, முக்கல்நாய்க்கணஅள்ளி, எ.ரெட்டி அள்ளி, அதகப்பாடி, பாப்பிநாயக்கனஅள்ளி, கிருஷ்ணாபுரம், ஆண்டிஅள்ளி, புழுதிக்கரை, கொண்டம்பட்டி, வெள்ளாளப்பட்டி, கோணங்கிநாய்க்கனஅள்ளி, வெள்ளோலை, நாய்க்கனஅள்ளி, அக்கமனஅள்ளி, மூக்கனூர், திப்பிரெட்டி அள்ளி, கொண்டகாரஅள்ளி, கோடுஅள்ளி, வே.முத்தம்பட்டி ஆகிய வருவாய் கிராமங்களிலும்,
பென்னாகரம் வருவாய் வட்டத்தில்:-
வட்டுவனஅள்ளி, பவளந்தூர், தித்தியோப்பனஅள்ளி, மாதேஅள்ளி, ஒன்னப்பகவுண்டனஅள்ளி, பள்ளிப்பட்டி, பிக்கிலி, பனைகுளம், சிகரலஅள்ளி, அஞ்சேஅள்ளி, ரங்காபுரம், பேயல்மாறி, பருவதனஅள்ளி, கூத்தப்பாடி, அளேபுரம், செங்கானூர், கூக்குட்டமருதஅள்ளி, சத்தியநாதபுரம், அரக்காசனஅள்ளி, சின்னம்பள்ளி, கலப்பம்பாடி, மஞ்சநாயக்கனஅள்ளி, நாகமரை, இராமகொண்டஅள்ளி, மஞ்சாரஅள்ளி, சுஞ்சல்நத்தம், தின்னபெல்லூர், அஜ்ஜனஅள்ளி, கோடிஅள்ளி, தொண்ணகுட்டஅள்ளி, சிடுமனஅள்ளி, பத்ரஅள்ளி, பெரும்பாலை, கெண்டனஅள்ளி ஆகிய கிராமங்களிலும்,
அரூர் வருவாய் வட்டத்தில்:-
எச்.அக்ரஹாரம், மோப்பிரிப்பட்டி, செல்லம்பட்டி, கீழானூர், ஈட்டியம்பட்டி, வேப்பம்பட்டி, வீரப்பநாயக்கன்பட்டி, பொய்யப்பட்டி, டி.ஆண்டியூர், வேடகட்டமடுவு, நரிப்பள்ளி, பெரியப்பட்டி, கோட்டப்பட்டி, பையர்நாயக்கன்பட்டி, சிட்டிலிங்கி, எஸ்.தாதம்பட்டி, அச்சல்வாடி, வடுகப்பட்டி, வேப்பநத்தம், கீழ்மொரப்பூர், மருதிப்பட்டி, எம்.வெளாம்பட்டி, எச்.தொட்டம்பட்டி, கீரைப்பட்டி, தாதரவலசை, எல்லப்புடையாம்பட்டி, செட்ரப்பட்டி, கொங்கவேம்பு, கே.வேட்ரப்பட்டி, மத்தியம்பட்டி, பறையப்பட்டி, மாம்பட்டி, சந்திராபுரம் ஆகிய கிராமங்களில் உள்ள நியாய விலைக் கடைப் பகுதிகள்,
தருமபுரி நகராட்சிப் பகுதியில்:-
வெள்ளேகவுண்டன்பாளையம், விருப்பாட்சிபும் ஆகிய நியாய விலைக் கடைப் பகுதிகள், பேரூராட்சிகளை பொறுத்தவரை, அரூர், பாப்பாரப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி பென்னாகரம் ஆகிய பேரூராட்சி பகுதிகள் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் 2-ஆம் கட்ட விண்ணப்ப பதிவு முகாம்களின் விண்ணப்ப பதிவு தன்னார்வலர்களுக்கான 2-ம் கட்ட பயிற்சி இன்று நடைபெற்றது.
இப்பயிற்சியில் விண்ணப்பதிவு தன்னார்வலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், விண்ணப்பத்தாரர்களிடமிருந்து பெறப்படும் தகவல்களை சரியாக பூர்த்தி செய்திடவும், பெறப்படும் விண்ணப்பங்களை முறையாக பராமரித்திடவும், இத்திட்ட விண்ணப்ப பதிவிற்கான இணையதளத்தினை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இப்பயிற்சியில் தருமபுரி வட்டாட்சியர் திரு.ஜெயசெல்வம், தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் விண்ணப்ப பதிவு தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர்.