விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனின் அக்கா பானுமதி (எ) வான்மதியின் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளையொட்டி தருமபுரி கிழக்கு மாவட்டம் சார்பில் அரூர் கச்சேரி மேட்டில் அவரது உறுவ படத்திற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் சோலை மா.ராமச்சந்திரன் தலைமையில் (கி) மாவட்ட செயலாளர் சி.கே.சாக்கன்சர்மா மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்வில் முன்னாள் மாவட்ட செயலாளர் ஜானகிராமன், செல்லை சக்தி, மூவேந்தன், கேசவன், சித்தார்த்தன், இளையராஜா, துரைவளவன், காதர்பாஷா, குழந்தைவேல், வைதமிழ் மற்றும் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.