தருமபுரி மாவட்டம் கோணங்கிநாயக்கன அள்ளி பஞ்சாயத்தில் SC, ST, MBC, BC இலங்கை தமிழர்கள் ஆகிய ஒருங்கிணைந்த 13 கிராமங்கள் உள்ளடக்கியது. 3509 மக்கள் தொகை வாழ்ந்து வருகிறார்கள். அனைத்து சமூகத்திலும் வறுமைக் கோட்டின் கீழே உள்ளவர்களே அதிகமாக உள்ளனர் இந்த மக்களுடைய வளர்ச்சி பஞ்சாயத்து வளர்ச்சி, ஒரு பஞ்சாயத்தின் வளர்ச்சி, ஒரு மாவட்டத்தின் வளர்ச்சி ஒரு மாநிலத்தின் வளர்ச்சி, ஒரு நாட்டின் வளர்ச்சி.இதன் அடிப்படையில் 10/07/2023 அடிப்படை வசதி செய்து தர கோரி மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்தித்து மனு கொடுத்தும். எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
உழைக்கின்ற மக்களின் அடிப்படை கோரிக்கை நிறைவேற்ற வேண்டும்! என்று தொடர்ந்து கோணங்கிநாயக்கன அள்ளி பஞ்சாயத்தின் மீது கவனம் செலுத்த வேண்டும்! என்று கோரிக்கை வழியுறுத்தி மாவட்ட ஆட்சியர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் பின்வரும் கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள்.
- பேருந்து வசதி மற்றும் நிழல் கூடம் அமைத்து தருதல்.
- வீடு இல்லாத ஏழை எளிய மக்களுக்கு ஒன்றிய, மாநில அரசு திட்டத்தால் ஒதுக்கப்பட்ட தொகுப்பு வீடு வழங்க வேண்டும்,
- சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குதல் மற்றும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் சரியாக நடைமுறைப்படுத்துதல்,
- 100 நாள் வேலை திட்டம் வழங்கப்படாத நபர்களுக்கு அட்டை வழங்குதல்.
- தூய்மை பணியாளர்களுக்கு சம்பளம் உயர்த்திதர வேண்டும் மற்றும் அவர்களுக்கு உயிருக்கு சரியான பாதுகாப்பான உபகரண பொருட்களை ஏற்படுத்தி தர வேண்டும்.
- அனைத்து கிராமத்திற்கும் விளையாட்டு மைதானம், சிறுவர் பூங்கா, உடற்பயிற்சி கூடம் அமைத்து தர வேண்டும்.
உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக