Type Here to Get Search Results !

பென்னாகரத்தில் நில தரகர்கள் நலச்சங்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.


தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள சமுதாய கூடத்தில் இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் நில தரகர்கள் நலச்சங்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.


இந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பீமன் என்கிற ஜடையன் தலைமை வகித்தார்,மாவட்ட துணைத் தலைவர் மணி மாவட்ட இணை செயலாளர் பாலகுமார் ஆகியோர் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து பேசினார்கள்.


இந்த நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பென்னாகரம் நகரம் மற்றும் ஒன்றியத்திற்கு என புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் பெண்ணாகரம் ஒன்றிய தலைவராக விஜயபாலாஜி,ஒன்றிய செயலாளராக பி.கே.குமார்,பொருளாளராக வெங்கடேஷ்,துணைத் தலைவர்களாக ராஜா, முனிமாது துணைச் செயலாளர்களாக மாதையன், தங்கவேல் ஆகியோரும் இவர்களுடன் செயற்குழு உறுப்பினர்களாக 15 பேரும் தேர்வு செய்யப்பட்டனர்.


இதே போல் பெண்ணாகரம் நகர கௌரவ தலைவராக மாரியப்பன், நகரத் தலைவராக தேவராஜ்,நகர செயலாளராக விக்னேஸ்வரன், நகர பொருளாளராக செல்வகுமார், துணைத் தலைவராக முத்து, துணைச் செயலாளராக பவுனேசன் ஆகியோரும் இவர்களுடன் 9 செயற்குழு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர். புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளை மாவட்ட தலைவர் பீமன் என்கிற ஜடையன் அறிமுகப்படுத்தி பேசினார்.


இந்த கூட்டத்தில் சென்னையில் கட்டப்பட்டுள்ள சங்கத்தின் மாநில தலைமை அலுவலக புதிய கட்டிடமான தொழிலாளர் மாளிகை திறப்பு விழா செப்டம்பர் 9-தேதி நடைபெற உள்ளது இதில் பென்னாகரத்தில் இருந்து பெருந்திரளானோர் சென்று கலந்து கொள்வது என்றும், இதேபோன்று டிசம்பர் மூன்றாம் தேதி திருப்பூரில் திருப்புமுனை நோக்கி என்னும் முழக்கத்தோடு நடைபெற உள்ள இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் நில தரகர்கள் நலச்சங்கத்தின் 20 ஆவது ஆண்டு விழா நிகழ்ச்சியிலும் பெருந்திரளானோர் சென்று கலந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது.


இந்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் சுமார் 60க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies