Type Here to Get Search Results !

பென்னாகரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7850/- வழங்கிட கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டத்தின் முடிவுப்படி சத்துணவு -அங்கன்வாடி, வருவாய் கிராம ஊழியர்கள், ஊராட்சி எழுத்தர்கள், வனத்துறை தொகுப்பூதிய ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூபாய் 7850/- வழங்கிட தமிழ்நாடு அரசை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் அனைத்து வட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.


இதன் படி இன்று செவ்வாய்க்கிழமை காலை பென்னாகரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் விஜயரங்கம் தலைமை வகித்தார், வட்ட செயலாளர் கணேசன் கோரிக்கைகள் குறித்து விளக்க உரையாற்றினார், மாவட்ட துணைத் தலைவர் கார்த்திகேயன் ,மாவட்ட இணை செயலாளர் சின்னராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள், இதில் சத்துணவு துறை பழனிச்சாமி, வனத்துறை சத்தியா பிள்ளை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இறுதியாக வட்ட பொருளாளர் தர்மலிங்கம் நன்றி கூறினார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies