தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சி மற்றும் அரசு மருத்துமனை சார்பில் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் பாலக்கோடு அரசு குழந்தைகள் நலன் மற்றும் மகப்பேறு மருத்துவமனையில் நடைபெற்றது.
முகாமிற்க்கு பேரூராட்சி தலைவர்கள் பாலக்கோடு பி.கே.முரளி தலைமை வகித்து குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். மாரண்டஅள்ளி பேருராட்சி தலைவர் வெங்கடேஷன். பாப்பாரப்பட்டி பேரூராட்சி தலைவர் பிருந்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் பாலக்கோடு. காரிமங்கலம். மாரண்டஅள்ளி, பாப்பாரப்பட்டி ஆகிய பேரூராட்சிகளின் பணிபுரியும் 192 தூய்மை பணியாளர்களுக்கு மார்பகப் புற்றுநோய். பி பி. சுகர். இ சி ஜி. கர்ப்பபை நோய் போன்ற பிரச்சனை குறித்து மருத்துவ பரிசோதனைகள் நடைப்பெற்றது.
முகாமில் பாலக்கோடு அரசு தலைமை மருத்துவர் பாலசுப்பிரமணியம். மருந்தாளுநர் முத்துசாமி. செவிலியர்கள். மருத்துவர்கள் பேரூராட்சியின் செயல் அலுவலர்கள் டார்த்தி, கோமதி, ஆயிஷா மற்றும் தூய்மை பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
.gif)

