தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு ஆண்கள் மற்றும் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கும் நிகழ்ச்சி பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் ஜீவாகிருஷ்ணன் மற்றும் ரங்கநாதன் தலைமையில் நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் எம்.எல்.ஏ கலந்து கொண்டு அரசு ஆண்கள் மேல்நிலப் பள்ளியில் 194 மாணவர்களுக்கும், மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 319 மாணவிகள் என மொத்தம் 513 மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி பேசியதாவது, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் தீவிர முயற்சியால் மருத்துவ படிப்பில் சேர 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டின் மூலம் தமிழக அளவில் தருமபுரி மாவட்டம் முன்னிலை பெற்றுள்ளது.
மேலும் உயர்கல்வி பெறும் மாணவ மாணவியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பள்ளி மாணவர்கள் சிறப்பாகப் பயின்று அதிக மதிப்பெண்கள் பெற்றால் அரசு கல்லூரிகளிலேயே அவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்பு கிடைக்கும். எனவே பள்ளி மாணவர்கள் பொதுத் தேர்வுகளில் அதிக கவனம் செலுத்தி தேர்ச்சி பெற்று அனைவரும் உயர்கல்வி பெறவேண்டும் என்றும், அரசு வழங்கும் விலையில்லா சைக்கிள்களை பயன்படுத்தி மாணவர்கள் கல்வியிலும் வாழ்விலும் முன்னேற வேண்டும் என மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் ஊராட்சிமன்ற தலைவர்கள் மாரியப்பன், கனபதி, கவுன்சிலர் விமலன், கூட்டுறவு சங்க தலைவர்கள் புதுர்சுப்ரமணி, வீரமணி, சரவணன், ஒன்றிய செயலாளர்கள் கோபால், வக்கில் செந்தில், நகர செயலாளர் ராஜா மற்றும் தலைமை ஆசிரியர்கள் புனிதா, இலட்சுமணன் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக