தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த கூத்தப்பாடி ஒகேனக்கல் மற்றும் பென்னாகரம் வனப் பகுதிகளை ஒட்டிய அமைந்துள்ளது. இங்கு, ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 15 நாட்களாக இப்பகுதிக்கு அடிக்கடி யானைகள் வந்து விளை நிலங்களை சேதப்படுத்தி செல்கின்றது.
இந்நிலையில், நேற்று தாசி கிணறு பகுதிக்கு வந்த ஒற்றை யானை அங்கு பயிரிடப்பட்டுள்ள ராகி, தக்காளி, முருங்கை உள்ளிட்ட பயிர்களை சேதம் செய்துவிட்டு, அதே பகுதியை சேர்ந்த பவுனேசன் என்பவருக்கு சொந்தமான ஆட்டுப்பட்டி அருகே சென்றபோது அங்கு குட்டிகளை எடுத்து வைத்திருக்கும் குடில்களை தள்ளிவிட்டு அதிலிருந்து ஆட்டுக்குட்டிகளை தும்பிக்கையால் தாக்கிய போது மூன்று ஆட்டுக்குட்டிகள் பலியானது.
இதை அடுத்து நேற்று காலை அப்பகுதிக்கு வந்த வனத்துறையினர் பலியான ஆட்டுக்குட்டிகள் மற்றும் சேதம் அடைந்த விலை பயிர்களை பார்வையிட்டு சென்றனர். ஏற்கனவே மூன்று மாதத்திற்கு முன் முதியவரை தாக்கியதில் கை உடைந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இப்பகுதிக்கு படையெடுக்கும் யானைகளை அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்டி அடிக்கும்படி அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
.gif)

