பேரூராட்சி செயல் அலுவலர் டார்த்தி முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் வரவு செலவு அறிக்கைகள் சமர்பிக்கப்பட்டது. மழைக்காலங்களில் சாலை மற்றும் தெருக்களின் ஓரம் தேங்கும் கழிவுநீரை அகற்றுவதற்காக மத்திய ஸ்வச்சபாரத் திட்டத்தின் கீழ் 45 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கழிவு நீர் வாகனம் மற்றும் குப்பைகளை அள்ளி செல்ல தானியங்கி வாகனம் வாங்கவும், கழிவு நீர் கால்வாய் இல்லாத பகுதிகளில் புதிய கழிவு நீர் கால்வாய் அமைக்கவும், பழுதடைந்த சாலைகள் மற்றும் கழிவுநீர் கால்வாய்களை புனரமைக்கவும், 18 வார்டுகளிலும் விடுபட்ட குடிநீர் குழாய் இணைப்புக்கள் வழங்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி கவுன்சிலர்கள், சுகாதாரஆய்வாளர் ரவீந்திரன், தலைமை எழுத்தர் அபுபக்கர், டெக்னிசியன், அலுவலர்கள், தூய்மை காவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் துணைத் தலைவர் தாஹசீனா இதாயத்துல்லா நன்றி தெரிவித்தார்.
.gif)

